இன்றைய சூழ்நிலையில் பலருக்கு தலையணை இல்லாத தூக்கம் என்பது உப்பில்லாத உணவு போலதான் அவ்வளவு கஷ்டமாக இருக்கும்.
தலையணை வைத்து உறங்குவது என்பது நமது உடலுக்கு சுகமானதாக இருந்தாலும், அது நமது உடலுக்கு தீங்கானது என சொல்கின்றன.
தலையனை வைத்து உறங்கும் பழக்கம் என்பது, ஆதி வாசிகளிடமோ, அதன் பின்னர் வந்தவர்களிடமோ இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். சாயும்போதும், உட்காரும்போதும் ஏதேனும் ஒன்றை ஒத்தாசையாக வைத்து, அதில் ஒருவித சுகத்தைக் கண்டு, அப்படியே மிருதுவான தடிமனான பொருட்களைத் தலைக்கு வைத்துத் தூங்குவது வழக்கமாயிருக்கிறது.
இந்த பழக்கம் ஆரம்பத்தில் ராஜாக்கள். பெரிய பணக்காரர்களிடத்தில் மட்டுமே நாளடைவில் இருந்தது. ஆனால், இந்த பழக்கத்திற்கு அனைவரும் அடிமையாகிவிட்டனர். இன்று அது வளர்ந்து விதவிதமான. தலையணைகளாக ஒவ்வொரு வீட்டிலும் இடம் பிடித்திருக்கின்றன.
நாம் நடக்கும்போது எப்படி உடலை நேராக வைத்து நடக்கிறோமோ, அதுபோலத்தான் உறங்கும் போதும், மேடு பள்ளம் இல்லாத சமமான தரையில் நேராகப் படுத்து உறங்க வேண்டும். அப்படி படுக்கும் போது. எக்காரணத்தை கொண்டும் குப்புறப்படுத்து உறங்கக்கூடாது. வானத்தைப் பார்த்துதான் தூங்க வேண்டும்.
மெத்தையில் படுப்பது, பஞ்சு நிரப்பிய மிருதுவான தலையணையை தலைக்கு வைப்பது ஆகியவற்றால். கழுத்துப் பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் அடையும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கழுத்து நரம்புகளும் பாதிக்கப்படும். அதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டு மூளை பாதிப்புகளில் தொடங்கி பலவிதமான பிரச்சனைகளுக்கு அது வழிவகுக்கிறதாம்.
என்னால் தலையணை இல்லாமல் ஒருநாளும் என்பவர்கள். அதிக பாதிப்பை தூங்க முடியாது விளைவிக்கக்கூடிய மெல்லிய, மிருதுவான, ஸ்பிரிங் தன்மையுள்ள தலையணை பயன்பாட்டை தவிரித்து குறைவான பாதிப்பைத் தரும் தடிமனான தலையணையை பயன்படுத்தலாம். இவை, அதிக உயரம் இல்லாமல், சின்னதாகவும், இயற்கையான பொருட்களால் (பிரம்பு நார் தலையணை...)
ஆனதாகவும் இருக்க வேண்டும். தலையணையை தலைக்கு மட்டும் வைக்காமல், தோள்பட்டையிலிருந்து தலை முழுவதற்கும் வைப்பது நல்லது.
0 comments:
Post a Comment