விக்கல் ஏன் ஏற்படுகின்றது. அதற்கான காரணங்கள் என்ன ?

நமது நெஞ்சுக்கும், வயிற்றுக்கும் இடையே உள்ள உதரவிதானம் என்கின்றதசைப்பகுதிதான் நாம் சுவாசிக்க உதவி செய்கின்றது.

 

நாம் மூச்சை உள்ளிழுக்கும் பொழுது இந்த

 

உதரவிதானம் கீழிறங்கி நுரையீரலுக்குள் காற்றினை

 

நிரப்பும் வேலையைச் செய்கின்றது. நாம் மஷச்சை வெளியே விடும் பொழுது இந்த உதரவிதானம் மேலேறி நுரையீரலை அழுத்தி காற்றைவெளியேறச் செய்கின்றது.

 

விக்கல் வருவது இங்கிருந்துதான். சில சமயங்களில் நமது மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல் படுத்தினால், இது மூளையின் கட்டுப்பாட்டை மீறி தன்னிச்சையாக திடீர் திடிரென்று சுருங்க ஆரம்பித்து விடும். அப்போது குரல் நாண்கள் சரியாகத் திறப்பதில்லை.

 

அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல் நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரலுக்குச் சென்று திரும்ப வேண்டும்.

 

அப்போது அந்தக் காற்று புல்லாங்குழலில் காற்றுக்

 

தடைபடும் போது இசை ஒன்று வெளிப்படுவது போல, ஹிக் ஹிக் என்ற ஒரு விநோத ஒலி எழுப்பப்படுகின்றது. இதுதான் விக்கல்.

 

விக்கல் வருவதற்கான காரணங்கள் :

 

1. உணவை வேகமாகச் சாப்பிடுதல்

 

2. அளவுக்கு மீறிய உணவை உண்ணுதல்

 

3. வாயுக்கள் நிறைந்த பானங்களை அருந்துதல்

 

4. அளவிற்கு அதிகமாக மது அருந்துதல்.

 

5. வயிற்றில் திடிரென்று ஏற்படும் வெப்ப மாற்றம்

 

6. விக்கல் வரும் போது மெதுவாக நீர் அருந்த வேண்டும்.

 

7. 1 ஸ்பூன் சர்க்கரையைச் சாப்பிட வேண்டும்

 

8. சுமார் 10 முதல் 20 விநாடிகள் மூச்சை இழுத்து பிடித்து விட்டு பின்னர் மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும். ஆனால் இதையும் மீறி விக்கல் நிற்க வில்லையென்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மேல்.

 

தேவை வயிற்றுக் கட்டுப்பாடு :

 

உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் முக்கியக் காரணம் ரத்தம் சுத்தமாக இல்லாததுதான். இந்த ரத்தத்தை சுத்திகரித்தால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தலாம்.

 

ரத்தத்தை சுத்தமானதாக இருக்க வேண்டுமானால்

 

1.உணவு

2.குடிநீர்

3.மூச்சுக்காற்று

4 தூக்கம்

5.உடல் உழைப்பு

 

இவை ஐந்தையும் ஒழுங்கு படுத்த வேண்டும். நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாவதற்கான வேலை வாயிலிருந்து ஆரம்பிக்கின்றது.

0 comments:

Post a Comment